ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டு ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ நேற்றைய தினம் முழுநாளும் மூடப்பட்டிருந்தது.
இதனால் நேற்று 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுஇ சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.