NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக கருதப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபருக்கே இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 8, 2016 அன்று, பொரளை புதிய மகசின் சிறைச்சாலைக்குப் பின் பகுதியிலுள்ள வீதியில் சோதனையின் போது 11.07 கிராம் ஹெரோயினுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles