(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஹைதி நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் திடீரென ஏற்பட்டுள்ள தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 42 பேர் வரை பலியாகி உள்ளனர்.
11 பேரை காணாமல் போயுள்ள நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் தகவலின்படி, கனமழையால் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். பலருக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தேசிய அவசரகால இயக்க மைய அதிகாரிகளை உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் ஏரியல் ஹென்றி உத்தரவிட்டு உள்ளார்.