NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹோமாகம பகுதியை சேர்ந்த மாணவி திடீர் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அத்துருகிரிய – பனாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம – முல்லேகம பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) காலை பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், தோழி ஒருவருடன் வீட்டு மாடியில் படித்துக் கொண்டிருந்த போது, அவரது தாயாரிடம் தனது கை வலிப்பதாகக் கூறிவிட்டு கீழே இறங்கி வந்துள்ளார்.

பின்னர் தாயார், ஒருவித மருந்தை கொடுத்து அனுப்பியதன் பின்னர், உடல் நலம் தேறியதை உணர்ந்த பின்னர், மீண்டும் தோழியுடன் படிக்க சென்ற போது, திடீரென வாந்தி எடுத்து தரையில் விழுந்துள்ளார். நோய்வாய்ப்பட்ட மகள் ஒருவாலா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, நோயாளியை பரிசோதித்த வைத்தியர்கள் மகள் உயிரிழந்துவிட்டதாக தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles