NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்று முதல் குறைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லங்கா சதொச 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.

அதன்படி,

சிவப்பு அரிசி 6 ரூபாவாலும், பச்சை பட்டாணி 325 ரூபாவாலும், காய்ந்த மிளகாய் 60 ரூபாவாலும், நெத்தலி 10 ரூபாவாலும், சிவப்பு பருப்பு ரூபாவாலும், சிவப்பு நாட்டரிசி 15 ரூபாவாலும், கோதுமை மாவு 10 ரூபாவாலும், சோயா (மொத்த விற்பனை) 10 ரூபாவாலும், கொண்டைக்கடலை கிலோ ஒன்றுக்கு 5 ரூபாவாலும் வெள்ளை சீனியின் விலை கிலோவொன்றுக்கு 4 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிவப்பு அரிசி 139 ரூபாவாகவும், பச்சை பட்டாணி 1225 ரூபாவாகவும், காய்ந்த மிளகாய் 1290 ரூபாவாகவும், நெத்தலி 1140 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு ரூபாவாகவும், சோயா (மொத்தம்) 650 ரூபாவாகவும், கொண்டைக்கடலை 650 ரூபாவாகவும், சீனி கிலோ 225 ரூபாவாகவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles