NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 அமைச்சுகளின் செலவுகளை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை கையாளும் மற்றும் அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவுகளை ஆய்வு செய்ய தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, மும்மொழிகளிலும் இது தொடர்பான அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்கக் கட்டமைப்பை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை வரைவை சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நீண்டகால பாதுகாப்புக் கொள்கையில் பாதுகாப்பு அமைச்சு செயற்படும்.

தேசிய கொள்கைகளை தயாரிப்பதில் ஏனைய அமைச்சுகளும் தேசிய கொள்கை கட்டமைப்பை பின்பற்றும் என நான் நம்புகின்றேன்.

இலங்கையில் தற்போதுள்ள கொள்கை கட்டமைப்பில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

பொருளாதாரத்திற்கு தேசிய கொள்கையின்மை என்பது குறிப்பிடத்தக்க பின்னடைவாகும்.

தேசியக் கொள்கைகள் தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக பாராளுமன்றம் குழுவொன்றை நியமித்துள்ளது.

தேசியக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் அதிகாரப் பகிர்வையும் மேற்கொள்ள முடியும் ” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles