NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 ஆண்டுகளின் பின் அரையிறுதிக்கு தகுதிபெற்றது தென்னாபிரிக்கா!

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 50 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

இதற்கமைய போட்டியின் இடைநடுவே மழை குறுக்கிட்டதால் DLS முறைப்படி போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு 123 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

123 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்க அணி 10 ஆண்டுகளின் பின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


https://1c4f6d38f1760a07f8c385537c8b4a79.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html
Share:

Related Articles