NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை..!

சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles