NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

100 குழந்தைகளுக்கு தந்தையான பாவெல் துரோவ்!

பிரபல சமூக வலைத்தளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை அதிகாரியுமான பாவெல் துரோவ் (39) திருமணம் ஆகாமல் 100 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

15 வருடங்களுக்கு முன்னர் பாவெல் துரோவின் நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்துள்ளார். அதனால் தனது விந்தணுவை முதல் முறையாக தானம் செய்துள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற தனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளார்.

இதன்மூலம் பாவெல் துரோவ் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாகியுள்ளார்.

Share:

Related Articles