NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் சடலங்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு!

வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா? அல்லது பொய்யா? என்பது இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது.

அதேநேரத்தில், ஏலியன்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழிச் செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம்.

இந்நிலையில், மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. ஏலியன்ஸ் கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அரசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.

இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles