NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை..!

இன்று முதல் ஒரு நாளைக்கு 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

சிலர் இரவு முழுவதும் உணவு, கழிப்பறை வசதியின்றி கடவுச்சீட்டு அலுவலகம் முன்பு வரிசையில் காத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அதன் இணையவழி கடவுச்சீட்டு முறையை நீக்கியதையடுத்து இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களத்திடம் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாலும் கடவுச்சீட்டுகள் பிரதான அலுவலகத்தில் நெருக்கடி ஏற்பட்டதாலும் வரையறுக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles