NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10,000 இலங்கையர்கள் பணிக்காக இஸ்ரேலுக்கு…

இலங்கையிலிருந்து 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை விவசாயத் தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஏற்கனவே 4,500 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுள் பெரும்பாலானோர் வீட்டு பராமரிப்பு துறையில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

காஸா போரினால் இஸ்ரேலின் விவசாயத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7 முதல், விவசாயத் துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது மட்டுமன்றி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலினால் பெரும்பாலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை சுமார் 20,000 பலஸ்தீன விவசாய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles