NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெற்றிக்கிண்ணத்தை தொடாத இந்திய பிரதமர்!

இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கிண்ண 20இற்கு  20 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்துடன் நாடு திரும்பிய நிலையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

முன்னதாக இந்திய அணியினர் இன்று காலை பாபடோஸில் இருந்து நேரடியாக புதுடில்லி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் பிரதமரின் இல்லத்துக்கு சென்று அவருடன் காலை உணவை உட்கொண்டனர்.

அவருடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டனர் இந்தப் புகைப்படமே தற்போது இந்தியாவில் அரசியல் மற்றும் பொதுவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

குறித்த புகைப்படத்தில் வீரர்களுடன் முன்வரிசையில் ரோஹித் சர்மா(Rohit Sharm), ராகுல் ட்ராவிட் ஆகியோருக்கு மத்தியில் பிரதமர் மோடி(Narendra Modi) நிற்கிறார்.

இதன்போது, மேலோட்டமாக பார்க்கும் போது ரோஹித் சர்மாவும், நரேந்திர மோடியும் ராகுல் ட்ராவிட்டும் வெற்றிக்கிண்ணத்தை தாங்கியிருப்பதை போன்று தெரிகிறது.

எனினும் ரோஹித்தும் ட்ராவிட்டும் கிண்ணத்தை தாங்கியிருக்க, மோடி அவர்கள் இருவரின் கைகளை பிடித்துக்கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் இது தாம் வெற்றி கொண்ட கிண்ணம் அல்ல. வீரர்கள் வெற்றி கொண்ட கிண்ணம் என்பதை மோடி காட்டியுள்ளதன் மூலம் இந்திய வீரர்களை கௌரவப்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் அரசியலில் இது விமர்ச்சிக்கப்படலாம் என்பதை தவிர்ப்பதற்காகவும் அவர் வெற்றிக்கிண்ணத்தை தொடுவதை தவிர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே இறுதியாக இடம்பெற்ற உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இது, மோடி கிரிக்கெட்டை அரசியலாக்கியுள்ளார் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனவே இதுபோன்ற ஒரு விமர்சனத்தை தவிர்க்கும் ஒரு வழியாகவும்; மோடியின் இன்றைய செயற்பாடு அமைந்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. 

Share:

Related Articles