NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ்ஸின் சக்கரம் கழண்டு விபத்து

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நேற்று மாலை வெளிமடை பொரலந்த வீதியில் பயணித்து கொண்டுடிருந்த போது திடீரென பஸ்ஸின் பின்புற இரண்டு சக்கரங்களும் ஒரேடியாக கழண்டு விலகி சென்றமையினால் பாரிய விபத்து ஒன்று பஸ் சாரதியினால் தடுக்கப்பட்டுள்ளதாக பஸ்ஸில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.

குறித்த பஸ் பயணிக்கும் போது பேருந்தில் 20 பேர் வரை இருந்ததாகவும் பஸ்ஸை சாரதி நிறுத்தாவிட்டால் பாரிய பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளாகி இருக்க கூடும் எனவும் பஸ்பயணித்தவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதிக்கு தங்களது பாராட்டுக்களையும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles