NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

11 மாதங்களின் பின்னர் நாடு திரும்பிய தனுஷ்க!

அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தனுஷ்க குணதிலக்க 11 மாதங்களின் பின்னர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது, யுவதி ஒருவருடன் உடலுறவில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டுள்ளார்.

குறித்த யுவதியின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை பயன்படுத்தாது, தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டதாக யுவதியினால் அந்த நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, தனுஷ்க குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் திகதி அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டதுடன், பின்னர் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு கடந்த 11 மாதங்கள் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளில், தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என அந்த நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles