NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

12 விலங்கு இனங்களை இணைத்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்!

புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா (Yannik Tissera) மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் 12 விலங்கு இனங்களை இணைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

ஜனவரி மாதத்தின் மூன்று வாரங்களுக்குள் மலையக பிரதேசத்தில் ஒரு இடத்தின் வழியாக பயணிக்கும் மிருகங்கள். ட்ரப் கமரா (Trap Camera /Trail Camera) மூலம் பதிவு செய்யப்பட்ட வெவ்வேறு உயிரினங்களின் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை Focus stacking / Layer stacking முறையைப் பயன்படுத்தி பல புகைப்படங்களை இணைத்து இந்த அற்புதமான படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் 12 உயிரினங்கள் உள்ளன. இந்த அனைத்து உயிரினங்களும் இந்த இடத்தை இடம்பெயர்வதற்கான சந்திப்பாகவும், ஒரு நடைபாதையாகவும் பயன்படுத்துகின்றன.

இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் வெறும் தேயிலைத் தோட்டங்கள் அல்ல. உண்மையில், மனிதனால் சிதைக்கப்பட்டு பின்னர் இயற்கையால் மீட்டெடுக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு. அந்த அமைப்பில் வாழும் விலங்குகளுக்கு இந்த தேயிலை தோட்டங்கள் இன்னொரு காடு. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் மிக உயர்ந்த மற்றும் பரந்த பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காணலாம்.

Share:

Related Articles