உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப ஜாம்பவான் எலோன் மஸ்க் 12வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார்.
இவர் பல திருமணங்கள் செய்துள்ளார் என இவர் மீதான சர்ச்சைகள் எழுந்த போதிலும் நியூராலிங்கின் இயக்குனரான ஷிவோன் ஜிலிஸுடன் அவர் பெற்ற மூன்றாவது குழந்தை இது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
தனது குழந்தை பிறந்ததை மிகவும் இரகசியமாக வைத்திருந்ததாக தற்போது மஸ்க் மீது புதிய விமர்சனமும் எழுந்துள்ளது.
ஆனால், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிந்துள்ள போதிலும் அது எப்படி இரகசியமாக மாறும் என்று மஸ்க் விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், 12ஆவது குழந்தை குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடாதது ஒரு பெரிய வியப்பான விடயம் அல்ல எனவும் அவர் தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார்.