NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

13 ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை ஜனாதிபதி இதன்போது முன்வைக்கவுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் தமது யோசனைகளை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளன.

அதில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி செயலகத்தில் தமது யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளன.

இருப்பினும், சுதந்திர மக்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க போவதில்லை என தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles