மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் சர்வகட்சி கூட்டத்திற்கு மீண்டும் கூடவுள்ளது.
அதற்கான அழைப்பு நேற்று அனுப்பப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி இக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை பெற முன்னர் 13 ஆம் திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுமாறும், ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.