(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களில் 14 பேரின் கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புல்கலைக்கழக பதிவாளர் எச்.கரீம் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கடந்த 17ஆம் திகதி இரவு மாணவர்களிடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.