நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மார்டின் கப்டில் 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார். 38 வயதாகும் கப்டில் 23 சதங்கள் அடித்துள்ளார். 198 ஒருநாள் போட்டிகள், 122 ரி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும் ரி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார்.
2009இல் அறிமுகமான கப்டில் கடைசியாக 2022இல் விளையாடினார். 2015 ஐ.சி.சி ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் 237 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் நியூஸிலாந்து வீரரும் இவரே. 1,385 பவுண்டரிகள், 383 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
கடந்த 2019 ஒருநாள் உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் எம்.எஸ். டோனியை ரன் அவுட் செய்து மிகவும் புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது