ஜம்மு-காஷ்மீருக்கு தகவல்களை அனுப்ப பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 அலைப்பேசி செயலிகளை இந்திய அரசு முடக்கியுள்ளது.
இந்தப் பயன்பாடுகளில் Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema ஆகியவை உள்ளடங்குகின்றன.
இந்த செயலிகளை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.