இங்கிலாந்தின் Dorset கவுன்டியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிரவுன்சீ தீவு Brownsea Island.
இங்குள்ள இயற்கை வனாந்திர பகுதியில் ஒரு டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது 140 மில்லியன் வருடங்கள் பழைமையான து எனத் தெரியவந்துள்ளது.
குறித்த கால்தடம், இகுனாடோன்ஷியன் (Igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசருடையது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், இந்த கால் தடத்தில் 3 விரல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தீவிலுள்ள Brownsea Castle எனப்படும் பகுதியில் வனத்துறை அதிகாரி ஒருவரே இதனை போது கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.