NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

14,000 கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட கப்பல் கொழும்பில்..

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

14,000 கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட Wan Hai என்ற சிங்கப்பூர் கப்பல் முதன்முறையாக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனை பொறுப்பேற்பதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் இன்று கொழும்பு துறைமுகத்திற் வருகை தந்திருந்தார்.

இந்தக் கப்பல் 335 மீற்றர் நீளமும் 51 மீற்றர் அகலமும் கொண்டது.

அத்துடன், இது தென்கிழக்கு ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி சேவைகளை வழங்கும் கப்பல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles