NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பும்ரா!

இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 474 ஓட்டங்களும், இந்தியா 369 ஓட்டங்களும் எடுத்தன.

இதனையடுத்து 105 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களும், தடுமாறி வருகிறது.

மார்னஸ் லபுசாக்னே 43 ஓட்டகளுடன் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் பும்ரா கைப்பற்றிய 4 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Share:

Related Articles