NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

15 வயது சிறுமி குழந்தையை பிரசவித்து விட்டு தப்பியோட்டம் – யாழ் வைத்தியசாலையில் சம்பவம்

குழந்தையை பிரசவித்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் குறித்த வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற நிலையில், குறித்த சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுமியின் தாயரும் சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார்.

சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறியப்பட்ட நிலையில், அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles