NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

15 வயது பாடசாலை மாணவி கடத்தல் – முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவில் 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு சென்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம் 9இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரே, கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், காணாமால் போன தனது மகள் தொடர்பான எந்தவிதமான தகவலும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தென்னிலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles