NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

1500 குடும்ப நலப் பணியாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

1500 குடும்ப நலப் பணியாளர்களை உடனடியாக இணைத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து மூன்று வருடங்களாக வேலை வாய்ப்பு தேடி வரும் குடும்ப நலப் பணியாளர்கள் குழுவொன்று இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles