தென்கிழக்கு ஆசியாவில் சுமார் 155 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஆர்கோலாந்து என்ற கண்டத்தின் சில பகுதிகளை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
சுமார் 155 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்கோலாந்து கண்டம் அமெரிக்காவை விட பெரிய நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
அத்தோடு, ஆர்கோலாந்து கண்டம் காலப்போக்கில் பல பகுதிகளாகப் பிரிந்து தென்கிழக்காசியாவில் பரவியதாக இந்த ஆராய்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் .
மேலும் அதன்போது, அந்த பகுதிகள் அவுஸ்திரேலியாவின் ஒரு பகுதியாக காணப்பட்டதாகவும் பின்னர் குறித்த பகுதிகள் இந்தோனேசியாவின் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும் ஆராயச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு தொடர்பான கட்டுரையை வெளியிட்ட குழுவின் தலைவரான நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் எல்ட் அட்வோகாட், இந்த நிலப்பகுதிகளில் உள்ள மிகக் குறைந்த அளவிலான தரவுகளால், அவர்கள் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், இதன் விளைவாக, ஆர்கோலாண்ட் கண்டத்தில் ஆராய்ச்சி 7 ஆண்டுகள் நீடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.