IPL தொடரில் Kolkata Knight Riders- panjab kings அணிகள் மோதிய லீக் போட்டியில் இதுவரை ஐபிஎல் தொடரில் நடக்காத ஒரு அதிசய சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தப் போட்டியில் ஆடிய இரு அணிகளின் நான்கு துவக்க வீரர்களும் 50 ரன்களுக்கும் மேல் ரன் குவித்தனர்
இதன் மூலம் 16 வருட ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு போட்டியில் பங்கேற்ற இரு அணிகளின் இரண்டு துவக்க வீரர்களும் 50 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அனந்த அணியின் துவக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் அதிரடி ஆட்டம் ஆடினார்கள். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தனர்
பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களும், சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களும் குவித்தனர். அதன் பின் வந்த வீரர்களும் அதிரடியாக ரன் சேர்த்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தது. அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங் செய்த போது அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கொல்கத்தா அணியின் துவக்க இணையை விட ஒரு படி மேலே அதிரடி ஆட்டம் ஆடினர்.