கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.
நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சிறுமிகள் இருவரும் தங்களுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என கடிதமொன்றையும் எழுதி வைத்து விட்டு இத் தவறான முடிவை எடுத்துள்ளனர்.
மேலும் இவ்விருவரும்,இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர்.
அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.