NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

17 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜன வீராங்கனைகள் நால்வர் இடம்பிடிப்பு!

இந்திய உதைபந்தாட்ட சம்மேளனமும் இந்திய விமானப்படையும் இணைந்து நடாத்தும் SABROTO International Football Tournament – 2024 இல் பங்குபற்றும் இலங்கை 17 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் 4 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

இப்போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த அணியில்..
யசோதரன் கல்சிகா
கேதீஸ்வரன் றேனுஜா
யோகானந்தராசா உமாசங்கவி
சயந்தன் கியுஸ்ரிகா

ஆகிய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் இந்த தேசிய அணியின் உதவிப் பயிற்றுநராக எமது கல்லூரியின் புகழ்பூத்த உதைபந்தாட்டப் பயிற்றுநர் திரு.சிவமகாராசா சாந்தகுமார் (சாந்தன்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles