NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

17 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவைத் தோற்கடித்த மேற்கிந்திய தீவுகள்!

மேற்கிந்திய தீவுகள் – இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நிறைவடைந்துள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இதன் மூலம் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடைசி 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட இந்திய அணி தோல்வியடையாமல் இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles