7 பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,700 ரூபாய் வேதனத்தை வழங்க இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை வேதன நிர்ணய சபையைக் கூட்டி இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், தேவை ஏற்படின் தீர்மானத்தை அமுல்ப்படுத்த விசேட சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.