சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
வெலிங்க்டனில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் மாட் ஹென்றி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.