NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

17ஆவது IPL சீசனில் CSK அணி அபார வெற்றி!

17ஆவது IPL கிரிக்கெட் திருவிழா இன்று இன்று தொடங்கியது.

தொடக்கப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தான தீர்மானித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்சி மற்றும் கோலி ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பிளெஸ்சிஸ் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க. அடுத்து களம் இறங்கிய படிதார், மேஸ்வெல் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து க்ரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டு வந்த நிலையில் கோலி 21 ஓட்டத்துடனும், க்ரீன் 18 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பெங்களூரு அணி 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்தது.

பெங்களூரு தரப்பில் அனுஜ் ராவத் 48 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 38 ஓட்டத்துடனும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி துடுப்பெடுத்தாடியது.

இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களக கேப்டன் கெய்குவாட், ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர். கெய்குவாட் 15 ரன்களிலும், ரவீந்திரா 37 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த ரஹானே 27 ரன்களிலும், டேரெல் மிச்சேல் 22 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ச் 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.

Share:

Related Articles