களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரொன்துடுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 9 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 3 மணிவரை நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நீர் குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.