NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வெல்லவாய – மல்வத்தாவல பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (14) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையின் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர்.

மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித பாரதூரமான பாதிப்பும் இல்லை என வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles