NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

187 மீட்டர் உயர கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய ஸ்பைடர் மேன்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை கண்டித்து பிரான்ஸில் ஸ்பைடர் மேன் என்றழைக்கப்படும் Alain Robert என்பவர் 187 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

கடந்த மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது மாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசிய ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களையெல்லாம் கொன்றனர்.

இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது. உலக நாடுகளை கவலையடைய செய்துள்ள இந்த போர் 1 மாதத்தை எட்டியுள்ளது.

இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு இதுவரை 9,500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை கண்டித்து பிரான்ஸில் ஸ்பைடர் மேன் என்றழைக்கப்படும் அலைன் ராபர்ட் என்பவர் 187 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share:

Related Articles