NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

19ஆவது ஆசிய விளையாட்டுத் தொடரின் இலங்கை அணியின் விபரம் !

சீனாவில் நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய விளையாட்டுத் தொடருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆண்கள் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ஏ அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை சஹான் ஆராச்சிகே வழிநடத்துகிறார்.

15பேர் கொண்ட இந்த அணியில், லசித் கிருஸ்புள்ளே, செவோன் டேனியல், அஷேன் பண்டார, சஹான் ஆராச்சிகே, அஹான் விக்ரமசிங்க, லஹிரு உதார, ரவிந்து பெனார்டோ, ரனித்த லியனாராச்சி, நுவனிந்து பெனார்டோ, சச்சித ஜெயதிலக்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், நிமேஷ் விமுக்த்தி, லஹிரு சமரகோன், நுவான் துசார, இசித்த விஜயசுந்தர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் அணியை பொறுத்தவரை சமாரி அத்தபத்து அணியை வழிநடத்துகிறார். இந்த அணியில், ஹர்சித்த சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, இமேஷா துலானி, அனுஷ்கா சஞ்சிவனி, ஒஷேதி ரனசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரனவீர, உதேஷிகா பிரபோதனி, ஹஷினி பெரேரா, கவுஷினி நுதயகன, அச்சினி குலசூரிய, இனோஷி பெனார்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share:

Related Articles