19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 1988இல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் கடைசியாக 2022ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் நடைபெற்றது.
இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ள இத்தொடரில், இந்தியா 5 முறையும், அவுஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் தலா ஒரு முறையும் உலக கிண்ணத்தை வென்றுள்ளன.
15வது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண போட்டி தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்கி பிப்ரவரி 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை உட்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன.
இலங்கை அணி ‘சி(c)’ பிரிவில் உள்ளது. ஜிம்பாப்வே, நமிபியா அவுஸ்திரேலியா, ஆகியவை அந்த பிரிவில் உள்ளன. நாளைய தொடக்க ஆட்டங்களில் அமெரிக்கா-அயர்லாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் (‘பி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வரும் 21ஆம் திகதி எதிர் கொள்கிறது.