19 வயதுக்குட்பட்டோருக்கான T20 மகளிர் உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய மற்றும் தென் ஆபிரிக்க மகளிர் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இன்று மதியம் 12 மணிக்கு கோலாலம்பூரில் ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய மகளிர் அணியுடனான முதலாவது அரையிறுதி போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க மகளிர் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இதனையடுத்து, இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.