19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் T20 உலகக் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாகவும் வென்று சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.
இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் T20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீராங்கனைகளை தேர்வு செய்து ,ந்த தொடரின் சிறந்த அணியை IC வெளியிட்டுள்ளது.
இந்த அணியில் இலங்கை வீராங்கனையான சமோதி பிரபோதாவும், 4 இந்திய வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கைலா ரெய்னெக் அணித்தலைவராகவும், இங்கிலாந்தின் கேட்டி ஜோன்ஸ் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.







