NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

19 நாய்களை ஈவிரக்கமின்றி கொன்ற நபர்.

கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் 19 நாய்களை கொன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபரின் வீட்டிலிருந்து 19 நாய்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் வீட்டின் பின்புறத்தில் நாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் நாய்க்குட்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கவனயீனமாக ஆயுதங்களை பயன்படுத்தியாகவும் மற்றும் விலங்குகளை சித்திரவதை செய்ததாகவும் அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் என்ன காரணத்தினால் குறித்த நபர் நாய்களை கொன்றார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles