NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் (Update)

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று 3 போட்டிகள் இடம்பெற்று இருந்தன.

இந்நிலையில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா அணி 84 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதையடுத்து, 252 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 181 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத்; தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதையடுத்து, 285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 26.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதையடுத்து, 175 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Share:

Related Articles