220 கிலோகிராம் எடையுள்ள இரண்டு செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.
இதற்கு டாக்கிங் செயல்முறை எனவும் பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த டாக்கிங் முறையானது மனிதனை விண்ணக்கு அனுப்பும் சுகன்யான் போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன்படி இந்த டாக்கிங் முறை வெற்றியைக் கொண்டாடும் நான்காவது நாடாக இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.