NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2 லட்சம் பேரால் வரவேற்கப்பட்ட மான்செஸ்டர் சிட்டி அணியினர் !

கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதியிருந்த நிலையில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த சீசனில் பிரிமீயர் லீக்இ எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3வது மகுடமாக அமைந்தது.

இந்நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 3வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles