(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தென் கொரியாவின் யெச்சியொன் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
நேற்று (05) நடைபெற்ற 4 400 மீற்றர் கலப்பின தொடர் ஓட்டப் போட்டியிலேயே இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
போட்டியை 3 நிமிடங்கள், 25.410 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை அணியினர் தங்கப் பதக்கம் வென்றனர். இது இலங்கை அணியினரால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.
வெற்றிப்பெற்ற இலங்கை கலப்பின தொடர் ஓட்ட அணியில் விநோத ஆரியவன்ஷ, ஜயேஷி உத்தரா, ஷெஹான் டில்ரங்க, தருஷி கருணாரட்ன ஆகியோர் இடம்பெற்றனர்.
அப்போட்டியில் தென் கொரியாவின் கலப்பின அணியினர் (3:28.293) வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியாவின் கலப்பின அணியினர் (3:30.129) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.