NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

20 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவுள்ளன!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று சுமார் 20 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவுள்ளன.

இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஐக்கிய மக்கள் கூட்டணி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்இ பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

அதன்படி எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகளும் குழுக்களும் தமது கூட்டணியில் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 8ஆம் திகதி இந்த நாட்டில் இதுவரை உருவாகாத பலமான கூட்டணி உருவாக்கப்பட்டது. இன்னும் 20 இற்கும் மேற்பட்ட தீவிர அரசியல் கட்சிகள் எம்முடன் கூட்டணி அமைக்கின்றன. இது தொடரும். இதன் ஊடாக இந்த நாட்டின் வரலாற்றில் வலிமையான அரசாங்கத்தையும் வலிமையான ஜனாதிபதியையும் ஸ்தாபிக்க இது எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.”

Share:

Related Articles