NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

20 நாடுகளுக்கு பயணம் செய்ய அமெரிக்கா தடை!

ரஷ்யா, வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷ்யா , வட கொரியா, ஈரான், ஈராக், யுக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share:

Related Articles